ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

இளைஞர்களின் குரலைக் கேளுங்கள்,  இன்றைய விவகார சூழலுக்கு ஏற்ப  அனைவரையும்  கட்டி அணைத்து செல்ல வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15: பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 300 இளைஞர்கள் இன்று தங்களின் கருத்துகளையும் பிரச்சனைகளையும் டத்தோ மந்திரி புசாருடன் பகிர்ந்து கொண்டனர்.

இளைஞர் குரல் நிகழ்ச்சி #INIMASAKAMI என்னும் ”இந்நிமிடம்நமது ”இன்று காலை லைவ் ஆர்ட்டில் நடந்தது. அதில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீன் சுங்கும் கலந்து கொண்டார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது உரையில் நிகழ்ச்சியின் அமைப்பைப் பாராட்டியதுடன், அனைத்து தரப்பினருக்கும் பேச வாய்ப்பளிக்கும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“இவை அனைத்தின் பார்வையும் ஒரு விரிவான மற்றும் முறையான சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைக்க அனுமதிக்கிறது.
“அனைத்து பிரச்சனைகளும் வேர் மட்டத்தில் இருந்து களையப்பட வேண்டும், ஏனென்றால் விவகாரங்களின்  சூழ் நிலைகளை  அடிப்படையாக கொண்டது. அதை முழுமையாகத் தீர்க்க முக்கிய சாராம்சங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி மாணவர்கள் தங்கள் துறைகளைப் பற்றி பேசுவதை உள்ளடக்கிய ஒரு மேடையாக மாறியது என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது. அங்கே, “பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள். தொழில் வல்லுநர்கள், பொதுத் தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் (OKU) உள்ளனர்.
“இன்று அவர்களும் தங்கள் பிரச்சனைகள் அல்லது கருத்துக்களை டத்தோ மந்திரி புசார் இடம் தொடர்ந்து தெரிவிக்கலாம். இது மாநில அரசு  நிர்வாகம் சில  விஷயங்கள் குறித்து மேலும் ஆழமாக தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது” என்று ஆரிஃப் ஃபிக்ரி ரிட்ஸ்வான் கூறினார்.

போக்குவரத்து, வாழ்க்கைச் செலவு, நகர திட்டமிடல், விளையாட்டு மேம்பாடு, பயிற்சி மாணவர் கொடுப்பனவுகளுக்கான மேலதிகமாக கூடுதல் பொருளாதாரத் துறைகள் ஆகியவை எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் அடங்கும்.


Pengarang :