PBTSUKANKINI

விளையாட்டு வசதிகளின் மேம்பாட்டிற்கான வெ.22.4  நிதி ஒதுக்கீட்டில் பாதித் தொகை செலவிடப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 16- இவ்வாண்டில் விளையாட்டு சார்ந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட 22 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியில் ஏறக்குறைய பாதித் தொகையை சிலாங்கூர் அரசு  இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

வட்டார மக்களின் தேவையின் அடிப்படையில் கால்பந்து, புட்சால், வலைப்பந்து மற்றும் பூப்பந்து திடல்களை சீரமைப்பது மற்றும்  புதிதாக நிர்மாணிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இதர வசதிகளை விட கால்பந்து திடல்களைத் தரம் உயர்த்துவதற்கே அதிகத் தொகை அதாவது 200.000 வெள்ளி செலவிடப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

நிதிக்கான விண்ணப்பம் மற்றும் அங்கீகரிக்கப் பட்டத் தொகையின் அடிப்படையில் சம்பந்தப் பட்டத் திடல்களை மதிப்பீடு செய்யப்பட்டு நிதி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கால்பந்து அல்லது புட்சால் திடல்களுடன் ஒப்பிடுகையில்  பூப்பந்து மற்றும் வலைப்பந்து திடல்களைச் சீரமைப்பதற்கு அதிகத் தொகை தேவைப் படாது என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று பாயா ஜெராஸ், எக்கோன் சேவ் பேரங்காடி வளாகத்தில் சிலாங்கூர் எக்ஸ்டிவி இ-ரோபோடாடிக் போட்டியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலம் முழுவதும் 200 விளையாட்டு வசதிகள் தரம் உயர்த்தப் பட்டும் புதிதாக உருவாக்கப் பட்டும் உள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :