ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஒன்றுபட்ட சமுதாயத்தின் உருவாக்கத்திற்கு தேசப்பற்றை தொடந்து விதைப்பீர்- மலேசியர்களுக்கு அன்வார்  கோரிக்கை

ஈப்போ, ஜூலை 16- ஒன்றுபட்ட சமுதாயத்தின் உருவாக்கத்திற்கு மலேசியர்கள் மத்தியில் தேசப்பற்று தொடர்ந்து விதைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வலுவான நாட்டை உருவாக்குவதற்கு பல இன, சமய மற்றும் பல்வேறு வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் சொன்னார்.

ஆகவே, தேசிய மாதத்தைக் கொண்டாடும் வகையில்  ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் வாயிலாகவும் தேசிய கொடியைப் பறக்கவிடுவதன் மூலமாகவும் நாட்டின் மீதானப் பற்றுதலை அவர்கள் புலப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்  கொண்டார்.

இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாட்டில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நாம் உண்மையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நல்லிணக்கத்தோடும் சுபிட்சத்தோடும வாழ்வதற்கும் இன, சமய ரீதியாக சகிப்புத் தன்மையைப் பேணிக் காப்பதற்கும் கிடைத்த வாய்ப்பினை நாம் போற்றிக் காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற 2023 தேசிய மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசிய கொடியைப் பறக்கவிடும் இயக்கத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த நிகழ்வை அன்வார் சார்பில் தொடக்கி வைத்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசுப், அவரது உரையையும் வாசித்தார்.

இந்த நிகழ்வில் 2023 மலேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தலைவரான தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலும் கலந்து கொண்டார்.


Pengarang :