EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

ஒற்றுமை அரசின் தேர்தல் வேலை  பாஸ் கட்சிக்கு பெரும் மிரட்டல். அமைச்சர் ஃபாமி பாட்சில் தகவல்.

செய்தி ;- சு. சுப்பையா

 

சுபாங்.ஜூலை.18-  சிவப்பு, நீல நிற சீருடை அணிந்த தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது பெரிக்காத்தானுக்கு பெரும் மிரட்டல். அதே வேளையில் பாஸ் கட்சிக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல் அமைச்சர் ஃபாமி பாட்சில் கூறினார்.

நேற்று கோத்தா டமன்சாரா சட்டமன்ற தொகுதியின் தேர்தல் இயந்திரம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது. இந்த தேர்தல் இயந்திரத்தை அமைச்சர் ஃபாமி பாட்சில் தொடக்கி வைத்தார்.

தாம் அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு பொறுப்பற்ற நபர்களால்  டிக் டாக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன என்று பலர் புகார் கூறினர். மேலும் அவதூறுகள் பரப்பபடும்  டிக் டாக்கை தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இது குறித்து நாட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரிடம் ஆலோசனை கேட்ட போது வேண்டாம் என்று மறுத்து விட்டார். எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகளுக்கு நாம் முறையான பதிலளிப்போம் என்று கூறினார்.

ஆனால் தற்போது பாஸ் கட்சியை சேர்ந்த கெடா மந்திரி புசார் சிலாங்கூர் சுல்தானையே அவதூறாக பேசத் தொடங்கி விட்டார். இதனால் தான் போலீஸ் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

சனூசி சிலாங்கூர் சுல்தானை மட்டும் அவதூறாக பேசவில்லை, அவர் கெடா சுல்தானை தவிர்த்து மற்ற அனைத்து சுல்தான்களையும் அவதூறாக பேசியுள்ளார் என்பதை அவரது உரையை நன்கு செவி மடுத்தால் புரியும் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுல்தானை அவதூறாக பேச சிலாங்கூர் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக சிலாங்கூர் மக்கள் கொதித்து எழுவார்கள்.

சிலாங்கூரின் துரித வளர்ச்சியை கண்டு  இதற்கு  தாம் தான்   காரணம் என்று அஸ்மின் கூறிக் கொள்கிறார்.  தான் காரணமென்றால் அவர் ஏன் மக்கள் வழங்கிய தேர்தல் தீர்ப்புக்கு எதிராக துரோகம் செய்தார் என்று ஃபாமி கேள்வி எழுப்பினார்.

நான் தகவல் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் அவதூறுகளை பெரிக்காத்தான் பரப்பி வருகின்றனர். விரைவில் எனது சாதனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் என்று அவர் கூறினார்.

ஒற்றுமை அரசு சாதிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆட்சி பொறுப்பு ஏற்று 7 அல்லது 8 மாதம் தான் ஆகிறது. முதல் 3 மாதத்தில் 71 பில்லியன் ரிங்கிட் அந்நிய முதலீடுகளை பிரதமர் கொண்டு வந்துள்ளார்.

33 மாத ஆட்சி காலத்தில் ஏன் பெரிக்காத்தானால் செய்ய முடியவில்லை. மேலும் அவர்கள் ஆட்சி காலத்தில் தற்போதைய வீழ்ச்சியை விட ரிங்கிட்  படு வீழ்ச்சி கண்டிருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகளுக்கு ஒற்றுமை அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நமது பொருளாதாரம் விரைவில் உயர்வு காணும். என்றார்.

33 மாத ஆட்சி காலத்தில் பெரிக்காத்தான் செய்த ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து அம்பலப்படுத்துவோம் என்று ஃபாமி சூளுரைத்தார்.

இந்த தேர்தல் இயந்திர தொடக்க விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஒற்றுமை அரசின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :