SELANGOR

சிலாங்கூரின் பொருளாதார பலம், பலர் தொழில் வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர் 

கோம்பாக், ஜூலை 24: சிலாங்கூரின் பொருளாதாரப் பலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் பலனளிக்கிறது, பலர் தொழில் வாய்ப்புகளைத் தேடி இங்கு குடியேறுகிறார்கள் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

ஐந்தாண்டுகளுக்குள் 89,000-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“தீபகற்பம், சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார வலிமையின் காரணமாக இங்கு வேலை தேடி வருகிறார்கள்.

இங்குள்ள கேஎஸ்எல் ஸ்போர்ட் ஃபுட்சால், பத்து கேவ்ஸில் நடைபெற்ற அமைச்சூர் கோப்பை  ஃபுட்சல் போட்டியின் நிறைவு விழாவில் அமிருடின் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் மாநிலம் தேசியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவும், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மிகப்பெரிய பங்களிப்பாளராகவும் ( 25.5 சதவீதம்) இருந்துள்ளது. அதாவது பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முறியடித்து சோதனையைத் தாங்கும் மாநிலமாகவும் இருக்கிறது என்று அமிருடின் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வெள்ளப் பேரிடர் போன்ற சவால்களை முறியடித்து சிலாங்கூர் முன்னேறிச் செல்லும் திறனை கொண்டுள்ளது என்பதனை இந்த சாதனை காட்டுகிறது என்றார்.


Pengarang :