SELANGOR

2008 முதல் 80,000 நில உரிமை விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம்

அம்பாங் ஜெயா, ஜூலை 24-
சிலாங்கூர் மாநில அரசு கடந்த
2008ஆம் ஆண்டு முதல் 80,000க்கும்
மேற்பட்ட நில உரிமைக்கான
அங்கீகாரக் கடிதங்களை (Notis 5A)
வழங்கியுள்ளது.

இந்நடவடிக்கையின் மூலம் தாங்கள்
வாழ்ந்து வரும் நிலத்தை
சொந்தமாக்கிக் கொள்ள நீண்ட
நாட்களாக காத்திருந்த மக்களுக்கு
நிம்மதி ஏற்பட்டுள்ளதோடு
சட்டவிரோதக் குடியிருப்பு
பிரச்சனைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2008 முதல் கடந்த ஆண்டு
ஜூலை வரை சிலாங்கூரில்
80,000க்கும் மேற்பட்ட நில
உரிமையாளர்களுக்கு உதவி
வழங்கப்பட்டுள்ளதாக மதிப்பிடுகிறேன் என அவர்
தெரிவித்தார்.

இன்று இங்குள்ள தாமான் கிராமாட்
எம்.பி.ஏ.ஜே. மண்டபத்தில் தாமான்
கிராமாட் குடியிருப்பாளர்களுக்கு 5ஏ
நோட்டிஸ் அறிக்கைகளை கடிதம்
வழங்கும் விழாவில் பேசியபோது
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நம்மால் பல பிரச்சனைகளைத் தீர்க்க
முடிந்தது. அதனால்தான் 2008ஆம்
ஆண்டுக்கு முன்னர் முன்பு பரவலாக
எதிரநோக்கிய சட்டவிரோதக்
குடியிருப்பு பிரச்சனையை இப்போது
எதிர்கொள்ளவில்லை என்று அவர்
கூறினார்.

தலா 1,000 வெள்ளி செலவில்
80,000 நில உரிமைகளை நாம்
வெளியிட்டுள்ளோம். அடமானம்
வைக்காத அல்லது விற்கப்படாத
வரை அந்நிலம் அதிக விலையில்
இருக்கும்.இந்நடவடிக்கை மூலம் நகர்ப்புற
குடியேற்றவாசிகள் அல்லது
குடிசைவாசிகளின் பிரச்சனைக்கு
தீர்வு கணடுள்ளோம் என்றார் அவர்.

முன்னதாக, அவர் இந்த ஆண்டின்
தொடக்கத்தில் மாநில ஆட்சிக் குழுவினால்
அங்கீகரிக்கப்பட்ட 46
விண்ணப்பதாரர்களுக்கு அமிருடின்
5ஏ கடிதங்களை வழங்கினார்.


Pengarang :