SELANGOR

இலவசக் குடிநீர்த் திட்டம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை சிலாங்கூர் அரசு மறுக்கிறது

ஷா ஆலம், ஜூலை 24: இலவசக் குடிநீர்த் திட்டம் நிறுத்தப் பட்டதாகச் சில குழுக்கள் பரப்பும் அவதூறான அறிக்கைகளை சிலாங்கூர் அரசு மறுக்கிறது.

டாருல் எஹ்சான் நீர் திட்டத்தின் (SADE) கீழ் இலவச தண்ணீர் வழங்குவது இன்னும் செயல் படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் பலன்களை கிட்டத்தட்ட 4 மில்லியன் பயனர்கள் அனுபவிக்கிறார்கள் என்றும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக மக்களின் சுமையை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

“முன்னதாக, லெம்பா சுபாங்கில் உள்ள பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பயனர்களைப் போலவே புக்கிட் டாமான்சாராவில் உள்ள பங்களா வீடுகளைக் கொண்ட பயனர்களும் இலவச நீர் திட்டத்தை அனுபவித்தனர்.

“தற்போது மறுசீரமைப்பு மூலம், RM 5,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் மட்டுமே இந்த நன்மையைப் பெறுகிறார்கள்” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல், மாநில அரசு, அதிகபட்ச குடும்ப வருமான வரம்பை RM4,000 லிருந்து RM5,000 மற்றும் அதற்கும் குறைவாக உயர்த்தி, மாதத்திற்கு 20 கன மீட்டர் இலவச நீரை பெறுவதற்கான தகுதியை மாற்றியது.


Pengarang :