ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENT

அவதூறு பரப்பும் செய்தியாளர் கூட்டத்தைத் தவிர்த்த மாநில பாஸ் ஆணையருக்கு மந்திரி புசார் பாராட்டு

கோம்பாக், ஆக 9- சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளலாமல் ஒதுங்கிய சிலாங்கூர் பாஸ் கட்சி ஆணையரின் நடவடிக்கையை மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பாராட்டினார்.

அந்த அவதூறு பரப்பும் தரப்பினர் நம்பத்தன்மை இல்லாதவர்கள் என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மாநில மந்திரி புசாருமான அவர் சொன்னார்.

நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரியின் விவேகமான செயலை நான் பாராட்டுகிறேன். காரணம் அவருக்கு எஸ்.எம்.ஜி. விவகாரம் நன்கு தெரியும் என்பதோடு சட்டமன்றத்திலும் அவர் இருந்துள்ளார் என்றார் அவர்.

இதற்கு மாறாக, அந்த செய்தியாளர் கூட்டத்திற்கு நம்பகத்தன்மை இல்லாத நபர்களும் சைபர் டூரூப்பர் எனப்படும் இணையை பதிவேட்டாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் டாக்டர் யூனுஸ் ஹைரியின் படமும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜித்ராவில் நடைபெற்ற பிரசாரத்தில் ஆற்றிய உரை தொடர்பில் பெரிக்கத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது  சனுசி முகமது நோருக்கு எதிராக அமிருடின் கடந்த 4ஆம் தேதி சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்


Pengarang :