Akta Industri Perkhidmatan Air 2006 (Akta 655) akan dipinda bagi mempertingkatkan penguatkuasaan dalam membendung insiden pencemaran sumber air, kata Menteri Air, Tanah dan Sumber Asli Datuk Dr A. Xavier Jayakumar. Foto: BERNAMA
ECONOMYEKSKLUSIFELMEDIA STATEMENTNATIONAL

பக்கத்தான்  ஹரப்பான் வெற்றி நாட்டு வளர்ச்சிக்கும்  மேன்மைக்கும்  உதவும்- முன்னாள்  அமைச்சர் டாக்டர் சேவியர்

கிள்ளான் ஆகஸ்ட் 8 – சனிக்கிழமை நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தல்கள், மதில் மேல்  பூனையாக  உள்ள  வாக்காளர்கள் திரண்டு வந்து PH-BN கூட்டணிக்கு வாக்களித்தால், சில இன்பஅதிர்ச்சிகள்  ஏற்படலாம் என்று டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

ஸகூப் சசிகையிடன் பேசுகையில், டாக்டர் சேவியர், மலேசியா மடாணி கொள்கையின் அறிமுகம் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் (எகோனோமிக் மடாணி) மடாணி பொருளாதார கொள்கை ஆகியவை மலேசியாவை அடுத்த பத்து ஆண்டுகளில் சரியான பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஒன்றாகும் என்றார். ஆனால், அதனை  வெற்றிகரமாக  செயல்படுத்துவதற்கான  முழு கடட்பாடு வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதற்கு மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள அரசுகள்  இரண்டும்  இணக்கப்போக்கை கொண்டு இருக்க வேண்டும்,  இரண்டும் கருத்து வேறுபாடுகள் இன்றி  செயல்படும் ஒற்றுமையை கொண்டிருக்கவேண்டும்.  “மாநில தேர்தலில் வாக்காளர்கள் மத்திய அரசோடு இணைந்து செயல் படக்கூடிய  ஒரு மாநில அரசை தேர்ந்தெடுப்பது நல்லது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் கோலாலங்காட் எம்.பி. எந்த ஒரு தேசியக் கொள்கை அல்லது கருத்துருவும் செயல்பாடுகளும் பலனளிக்க்கூடிய முடிவுகளை வழங்க குறைந்த பட்சம் ஐந்து முதல் 10 ஆண்டுகள்  ஆகும், அந்த காலகட்டத்தில் இடையூறு இல்லாத ஆட்சி தேவை என்றார். “அன்வார் மேம்பாட்டுக்கான திட்டங்களை வரையும் போது மாநில அரசுகள் அதை சந்தேகம் அல்லது அரசியல் தலையீடாக கருதாமல், நாம் நாட்டு நன்மைக்காக என்ன செய்ய விரும்புகிறோம்? நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதற்கான ஒத்துழைப்பை  அர்பணிப்பைவழங்க வேண்டும்.

ஆனால் அரசியல் கட்சிகள், கட்சி வேறுபாடுகளால் நோக்கம் நிறைவேற விடாமல் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பது நம் நாட்டைகொண்டு செல்ல வேண்டிய இலக்கிலிருந்து திசை மாறி செல்ல அனுமதிப்பதாகும் என்றார் அவர்.

 

இப்பொழுது இனம், மதம் மற்றும் அரச குடும்பம் 3Rs ( சம்பந்தப்படுத்தி) விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்.  நாம் தொடர்ந்து தர்க்கம் செய்ய கூடாது. அரசியல் உறுதியற்ற தன்மை  உருவாக அனுமதிக்க கூடாது. அனைத்து  மலேசியர்களும் ஏற்றுக் கொண்ட ஒன்றை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

நாடு வளர்ச்சியடையவும் முன்னேற்றவும் பாடுபட வேண்டிய நேரம் இது,” என்றார். முன்னெப்போதும் இல்லாதவகையில் PH-BN கூட்டணியின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, அது  வாய்ப்புகள், சூழ்நிலைகள் மற்றும் தியாகங்களின்  அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கம் உருவாக்கப் பட்டது என டாக்டர் சேவியர் குறிப்பிட்டார்.

“அதனால்தான் நாட்டிற்காக  செயல்படக்கூடிய வேலை செய்யும், கூட்டணி வேண்டும்.இந்தக் கூட்டணி வெற்றி அடையும் பட்சத்தில், நீண்ட காலத்திற்கு பின் நாடு சரியான தடத்தில் பயணிப்பதாகும். அந்நேரத்தில் , இந்தக்கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது.

எனவே, மலேசியர்கள்,  அரசாங்கத்தை அமைக்க தேர்ந்தெடுக்கும் கட்சி, மக்கள் விரும்பும் அபிவிருத்திகளை முழு மனதாக ஏற்று செயல்படுத்த  ஏற்றதாக  இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“வழியில் தடைகள் மற்றும் சவால்கள் இருக்கும், அதனால் திசை மாறக்கூடாது.  அரசியல்ஸ்திரத்தன்மையுடன், அவர்கள் அதை சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். “மாற்றங்கள் ஒரேஇரவில் நிகழாது, ஆனால் இப்போது கார்ப்பரேட் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நீண்ட காலத்திற்கு நாடு முன்னேறும் திசையை தெளிவாகக் கொண்டிருப்பார்கள்,” என்றுஅவர் கூறினார்.

தேர்தலில் சாத்தியமான விளைவுகளைப் பற்றி கேட்டபோது, பெரிய மாற்றங்கள்  ஏதும் நடக்க வாய்ப்பில்லை, மாற்றத்திற்காக வலுவான வாக்காளர்கள் பங்கெடுப்புடன்  மதில் மேல் பூனையாக  உள்ள  வாக்காளர்களும்  ஒன்றிணைந்து  ஒரே மாதிரியான முடிவை எடுத்தால் அன்றி எல்லாம் நிலையாகவே  இருக்கும் என்று டாக்டர் சேவியர் கூறினார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, திராங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்குஅடுத்த நிர்வாகத்தைத் தீர்மானிக்கும் வகையில் வாக்காளர்கள் இந்த சனிக்கிழமைவாக்குச் சாவடிக்கு செல்ல உள்ளனர்.


Pengarang :