ECONOMYMEDIA STATEMENTPBT

40 தொகுதிக்கு மேல்  ஒற்றுமை  கூட்டணி  கைவசம்

செய்தி ; சு. சுப்பையா
 
பத்துகேவ்ஸ். ஆகஸ்ட். 11- சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் இறுதி உச்சக் கட்ட பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. அலை கடலென இளைஞர்கள் பட்டாளம் அணி திரண்டிருந்தது. இக்கூட்டத்தில் உரையாற்றிய மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி இத்தேர்தலில் சிலாங்கூரில் 40 க்கும் மேற்பட்ட சட்ட மன்ற தொகுதிகளில் ஒற்றுமை கூட்டணியின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
 
இந்த  அறிவிப்பை கேட்டு உற்சாக மகிழ்ச்சியில் தொண்டார்கள் இசைக் கருவிகள் வாசித்து கொண்டாடினார்கள்.
 
சுமார் இரண்டாயிரம் தொண்டர்கள் அணி திரண்டு வந்தனர். குறைந்தது 300க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் அணி திரண்டு வந்தனர். இதில் இந்திய இளைஞர்களும் அடங்குவர்.
 
இந்த இளைஞர்கள் பெரும் வாரியாக திக் தொக்கில் உலா வருபவர்கள். கடந்த காலத்தில் திக் தொக் ஒரு பிரச்சார தளமாக இருந்தது. ஆனால் இம்முறை ஒற்றுமை கூட்டணி தொண்டர்கள் திக் தொக்கிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.
 
1970களில் துன் அப்துல் ரசாக் தேசிய முன்னணி  கூட்டணியை உருவாக்கினார். தற்போது ஒற்றுமை கூட்டணி உருவாகியுள்ளது. இக்கூட்டணி அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சி பீடத்தை கைவசம் வைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
 
சுங்கை துவா சட்ட மன்ற தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக நம்பிக்கை கூட்டணியின் கோட்டையாக திகழ்கிறது. இது தொடர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
 
பெரிக்காத்தான் சிலாங்கூரை கைப் பற்றி மத்திய அரசை கொள்ளை புறமாக வீழ்த்தும் சதிநாச வேளையில் ஈடுபடத் துடிக்கின்றனர். அவர்களின் தீய எண்ணம் ஈடேற நாம் விடக்கூடாது.
 
சிலாங்கூர் மாநில அரசை வீழ்த்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி சீர் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட பார்க்கின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது. 
 
நாட்டின் வருமானத்தில் 25.5% சிலாங்கூரிலிருந்து கிடைக்கிறது. அடுத்த சில வருடங்களில் 30% மாக் உயர்த்த நாம் பாடு படுவோம் என்றுக் கேட்டுக் கொண்டார்.
 
சுங்கை துவா நமது கோட்டை என்பதை உறுதி செய்வோம். சிலாங்கூர் ஆட்சி நிர்வாகம் தொடர்ந்து ஒற்றுமை கூட்டணியின் கீழ் இருப்பதை உறுதி செய்வோம் என்று கேட்டுக் கொண்டார்.
 
இன்று நள்ளிரவு 12.00 மணியோடு பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு நாளை காலை 8.00 முதல் வாக்களிக்க செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
 
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் இளைஞர்கள் அனல் பறக்கும் பிரச்சார உரையாற்றினார்கள்.

Pengarang :