ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெலாங்கை தொகுதி காலியானது தொடர்பில் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்படும்

கிள்ளான்,  ஆக 18 – பகாங் மாநிலத்தின் பெலங்கை சட்டமன்றத் தொகுதி காலியானது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விரைவில் அறிவிக்கப்படும் என பகாங் சட்டமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ முகமட் ஷர்கார் சம்சுடின் தெரிவித்தார்.

ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே நேற்று நடந்த விமான விபத்தில் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.

மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன், ஜோஹாரியின் இறுதிச் சடங்கை மேற்கொள்வதில் அவரின் குடும்பத்தினருக்கு  உதவுவது  முக்கியமாதாகும் என்று ஷர்கார் கூறினார்.

இறந்தவரின் இறுதிச் சடங்கை முதலில் நடத்துவோம் என்று நேற்றிரவு இங்குள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது  அவர் கூறினார்.

பகாங் ஊராட்சி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான,  ஜோஹாரி (வயது 53)  கத்ரி  விரைவுச் சாலையில் நேற்று மதியம் திகழ்ந்த   இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்பு கெடா, லங்காவியில் பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலுடன் நடந்த கூட்டத்தில் ஜோஹாரி கலந்து கொண்டதாக ஷர்கார் தெரிவித்தார்.

 

– பெர்னாமா


Pengarang :