ALAM SEKITAR & CUACAECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்

புத்ரா ஜெயா ஆக 18- நாட்டில் துடிப்புமிக்க இயக்கங்களில் ஒன்றான மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்கு மனிதவள அமைச்சர்  வ. சிவகுமார் 50,000, வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைவர் முருகன் தலைமையிலான பொறுப்பாளர்களிடம் நேற்று 50,000 வெள்ளிக்கான மானியத்தை அவர் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1956-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் சிறப்பாக செயலாற்றி வருகின்றது.

தமிழ் சார்ந்த, கலை, கலாச்சாரம் நிகழ்வுகளையும் தலைமைத்துவப் பயிற்சி செயல்திறன் பயிற்சி என இளைஞர்களுக்கு பல பயிற்சிகளும் வழங்கி கொண்டு வருகிறது.

சிறப்பாக செயல்படும் தமிழ் இளைஞர் மணிமன்றம் இன்று அதன் பேரவையின் தலைவர் திரு. ம.முருகன் தலைமைத்துவத்தின் கீழ் பீடு நடை போடுகிறது.

அந்த வகையில் மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம் மேலும் சிறப்பாக இயங்குவதற்கு இந்த நிதியுதவியை வழங்கியதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இதனிடையே  மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் மேலும் துடிப்புடன் செயல்பட மலேசிய மனிதவள அமைச்சர் மாண்புமிகு  சிவகுமார் அவர்கள்  50,000 வெள்ளியை  வழங்கியது பாராட்டுக்குரியது என்று மணிமன்றத் தலைவர் முருகன் தெரிவித்தார்.

 அவருடனான இந்த சந்திப்பில் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றங்களின் தலைவர் திரு.ம.முருகன், உதவித் தலைவர் கே.கணேஷ், ஜோகூர் மாநிலத் தலைவர் திரு ஹரி,விலாயா மாநிலத் தலைவர் திரு செல்வகுமார், துணைச் செயலாளர் திரு சிவனேசன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :