NATIONAL

அனைத்து எம்.பி.க்களும் அக்டோபர் இறுதிக்குள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்- சபாநாயகர் வலியுறுத்து

கோலாலம்பூர், செப் 13- அனைத்து நாடாடாளுமன்ற உறுப்பினர்களும்
வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் கட்டாய மருத்துவப் பரிசோதனையை
மேற்கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி
அப்துல் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்ல உடலாரோக்கியத்துடன் இருப்பதை
உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்கள் தொடர்ச்சியாக மருத்துவப்
பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற சுகாதார அமைச்சின்
பரிந்துரைக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் உடல் நிலை குறித்து நாம் பெரிதும் கவலைப்படுகிறேன்.
மரணத்திற்கு வழிகோலக்கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று
அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் கட்டாய மருத்துவப் பரிசோதனையை
மேற்கொள்ளக் கோரும் அறிக்கை நேற்று செப்டம்பர் 12ஆம் தேதி
வெளியிடப்பட்டது என்று அவர் சொன்னார்.

மக்களவையில் நடைபெற்று வரும் 12வது மலேசியத் திட்டத்தின் மத்திய
தவணைக்கான மதிப்பாய்வு மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.

அந்த அறிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்ற சுகாதார கிளினிக் அல்லது இதர
சுகாதார கிளினிக்குகள் மற்றும் தனியார் சுகாதார நிலையங்களில் இந்த
மருத்துவப் பரிசோதனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேற்கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடல்
நலக்குறைவுக்கு ஆளானதை தாம் கண்டுள்ளதாக கூறிய அவர், அனைத்து

மக்கள் பிரதிநிதிகளும் உடலாரோக்கிய விஷயத்தில் தீவிர கவனம்
செலுத்த வேண்டும் என்றார்.


Pengarang :