ECONOMYMEDIA STATEMENTPBT

குப்பை அகற்றும் பணி  அக்.1 முதல் கிராம  வீடுகளுக்கும் விரிவாக்கம்- கிள்ளான் நகராண்மைக் கழகம் தகவல்

ஷா ஆலம், செப் 28- வரும்  அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி   கிள்ளானைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மற்றும் லோட் குடியிருப்புப்  பகுதிகளிலும் குப்பைகளை வீடு வீடாகச் சேகரிக்கும் பணியை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

அந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் முன்புறம் குப்பைத் தொட்டிகளை வைப்பதற்கு குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பை தாங்கள்  கோருவதாக  கிள்ளான்  நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

இந்த குப்பைத் தொட்டிகளை வழங்குவதன் மூலம் கும்புலான் டாருள் ஏசான் நிறுவனம் குறிப்பிட்ட அட்டவணையின்படி சம்பந்தப்பட்டப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியை எளிதாக மேற்கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.

கிள்ளான் நகரம் சுத்தமாகவும் அழகாகவும் இருப்பதை உறுதிசெய்வதில் குடியிருப்பாளர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்  என்று நேற்று  இங்கு நடைபெற்ற  நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி இங்குள்ள எம்.பி.கே  தலைமையகத்தின் டேவான் ஹம்சா நடைபெற்ற சந்திப்பில்  இதன் தொடர்பான விளக்கம் பெங்குளு மற்றும் கிராமத் தலைவர்களுக்கு வழங்கப் பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2007 ஆம் ஆண்டு எம்.பி.கே. துணைச் சட்டத்தின் 6 வது பிரிவின்படி அனைத்து வளாகங்களுக்கும் குப்பைத் தொட்டிகளை வழங்குவது கட்டாயமாகும் என அவர்  மேலும் கூறினார்.

கு பெரிதும் உதவுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :