ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்து இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலம், செப் 30- சிலாங்கூரின் நான்கு இடங்களில் நேற்று மாலை 6.00 மணி வரை காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.

கோல சிலாங்கூரில் காற்றின் மாசுக் குறியீடு 154ஆகவும் பெட்டாலிங் ஜெயாவில் 153ஆகவும் ஜோஹான் செத்தியாவில் 151ஆகவும் ஷா ஆலமில் 150ஆகவும் பதிவானதாக மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை முறையின் அகப்பக்கம் கூறியது.

தலைநகர் செராஸில்  ஐ.பி.யு. குறியீடு மிக உயர்ந்த அளவில் அதாவது 155ஆகப் பதிவானது. இது தவிர கோலாலம்பூரின் பத்து மூடா (153), நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் (136) புத்ராஜெயா (122), தைப்பிங் 135) மற்றும் தாசேக் ஈப்போ (108) ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தது.

சுழியம் முதல் 50 வரையிலான ஐ.பி.யு. அளவு சிறப்பானதாகவும் 51 முதல் 100 வரையிலான அளவு மிதமானதாகவும் 101 முதல் 200 வரையிலான அளவு  ஆரோக்கியமற்றதாகவும 201 முதல் 300 வரையிலான அளவு  ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் ஏ.பி.ஐ.எம்.எஸ். அகப்பக்கம் வாயிலாக நடப்பு ஐ.பி.யு. அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் முதல் அக்டோபர் வரை ஆசியான் பிராந்தியத்தின் தென் பகுதியில் கடுமையான புகைமூட்டப் பிரச்சனை ஏற்படும என வானிலை மற்றும் பருவநிலை நிர்வாகத் தரப்பு முன்னதாகக் கூறியிருந்தது.


Pengarang :