EVENTMEDIA STATEMENTSELANGOR

சடலம் கண்டெடுக்கப்பட்டது ! காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணியா?

ஈப்போ, அக். 1: பகாங், கேமரன் ஹைலேண்ட்ஸ், குனுங் ஜாசர், தானா ராத்தா மலை ஏறும் போது காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணி என நம்பப்படும் ஆணின் சடலம் பேராக்-பகாங் எல்லைப் பகுதியில் உள்ள ஆற்றில் இன்று கண்டெடுக்கப்பட்டது.

பிற்பகல் 3.40 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், ஹெலிகாப்டர் உதவி தேவைப்படும் நிலப்பரப்பு காரணங்களால் வெளியே எடுக்க முடியவில்லை என்றும் கேமரன்மலை மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

விமானப்படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் நாளை காலை 9 மணிக்கு உடலை வெளியே கொண்டு வரப்பட எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

“கேமரன் ஹைலேண்ட்ஸ் உள்ள சுல்தானா ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும்” என்று அவர் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக எந்தவித ஊகங்களும் வெளியிட வேண்டாம் என்றும், ஏதேனும் தகவல் தெரிந்தால், 05-4915 999 அல்லது அருகில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தின்  கட்டுப்பாட்டு அறைக்கு (DCC) தகவல் தெரிவிக்குமாறு அஸ்ரி பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

முன்னதாக, ஜசார் மலையில் ஏறும் போது கடந்த செப்டம்பர் 22 முதல் காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி நந்தன் சுரேஷ் நட்கர்னி (44) என்பவரை தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கான (எஸ்ஏஆர்) தேடுதல் பகுதி நேற்று பேராக் எல்லைக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டது என்று அஸ்ரி தெரிவித்தார். .

போலீஸ், தீயணைப்புப் படை, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் அரசு சாரா நிறுவனங்களான மாலிம் குனுங் கேமரூன் ஹைலேண்ட்ஸ், ரேடியோ கம்யூனிகேஷன் அண்ட் ரிக்ரியேஷன் கிளப் போன்ற பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 101 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கிய தேடுதல் பணியின் ஆறாவது நாள் இன்று.

பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 19 அன்று ஹைக்கர்ஸ் ஸ்லீப் போர்ட் கெஸ்ட் ஹவுஸ், தானா  ராத்தாவில் தங்கி செப்டம்பர் 24 அன்று செக் அவுட் செய்திருக்க வேண்டும்.

போலீஸ் முதற்கட்ட விசாரணையின் விளைவாக, தான ராத்தா பகுதியைச் சுற்றியுள்ள சில கண்காணிப்பு  கேமரா (சிசிடிவி) காட்சிகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 22 அன்று, தனியாக குனுங் ஜாசரின் பாதை 10 இல் ஏறும் நடவடிக்கைகளுக்காக ஹோட்டலை விட்டுச் சென்றது கண்டறியப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :