NATIONAL

வெற்றியை நோக்கி பாரிசான் பக்கத்தான் கூட்டணி

பெந்தோங், அக் 7:பெலாங்கி தொகுதியின் இடைத் தேர்தலுக்கான (பிஆர்கே) வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

இதில் 30 பிரிவுகளை உள்ளடக்கிய ஒன்பது வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் ஃபெல்டா கெமாசுல் பொது மண்டபத்தில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இன்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அமிசார் அபு ஆடாம், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமட் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஹஸ்லி ஹெம்லி டி.எம்.சுல்ஹஸ்லி ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆனால்  சற்று முன் வந்த செய்திகள் படி பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அமிசார் அபு ஆடாம்,  பெலாங்கி  சட்டமன்றத்  தொகுதியில் வெற்றியைத் தற்காக்கும் அளவுக்கு முன்னணி வகிப்பதாகத்  தகவல் அறிந்த  வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதனுடன்  பாரிசான் நேஷனல் தலைவர்கள்  அவர்களிடையே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ள  தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.

சுமார் 87 சதவீதம் வாக்குகள்  எண்ணப்பட்டு உள்ள வேளையில் பாரிசான் நேஷனல்  வேட்பாளர் 6077 வாக்குகளும்  பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமட்   3142 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளதாகத்  தெரிகிறது. அதே வேளையில், மசீச  தலைவர் வீ கா சியோங்  வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்ற செய்தி  பாரிசான் வெற்றியை உறுதி படுத்துவதாக உள்ளது.


Pengarang :