NATIONAL

மக்களவை விவாதத்தில் பொருள் விலையேற்றம், புகை மூட்டப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை

கோலாலம்பூர், அக் 9- இன்றைய மக்களவைக் கூட்டத்தில் பொருள்
விலையேற்றம், அரிசி பற்றாக்குறை, புகைமூட்டப் பிரச்சனை மற்றும்
வெள்ளத்தை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் தயார் நிலை தொடர்பான
விவகாரங்கள் முக்கிய விவாதப் பொருளாக அமையும்.

அண்மைய காலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம் கண்டு
வரும் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசாங்கம் எடுத்து வரும்
நடவடிக்கைகள் குறித்து உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சரிடம் ஸ்ரீ அமான் தொகுதி ஜி.பி.எஸ். கட்சி உறுப்பினர்
டத்தோஸ்ரீ டோரிஸ் சோபியா ப்ரோடி கேள்வியெழுப்புவார் என
நாடாளுமன்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அவை நிகழ்ச்சி
நிரலில் குறிபிடப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று நடைபெறும் வாய் மொழி கேள்வி பதில்
அங்கத்தின் போது டோரிஸ் சோபியா இந்த கேள்வியை எழுப்புவார்.
வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இதுவரை நிர்மாணிக்கப்பட்ட
நிரந்தர வெள்ள நிவாரண மையங்களின் எண்ணிக்கை மற்றும் அவை
அமைந்துள்ள இடங்கள் குறித்து ஆராவ் தொகுதி பெரிக்காத்தான்
நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ சஹிடான் காசிம் விளக்கம்
கோரவிருக்கிறார்.

நாடு முழுவதும் நிரந்தர வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்படும்
என துணைப்பிரதமர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கூறியிருந்ததால் இந்த
கேள்வியை சஹிடான் காசிம் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடியிடம்
முன்வைப்பார்.

நாட்டில் நிலவும் பச்சரிசி பற்றாக்குறை தொடர்பில் விவசாய மற்றும்
உணவு உத்தரவாத அமைச்சரும் புகை மூட்டம் தொடர்பில் இயற்கை

வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சரும்
மக்களவையில் விளக்கம் தருவர்.


Pengarang :