SELANGOR

மத்திய கிழக்கு சிலாங்கூர் மாணவர் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், 11 அக்: அம்மான், ஜோர்டானின் நடைபெற்ற மத்திய கிழக்கு சிலாங்கூர் மாணவர் மாநாட்டின் மூன்றாவது பதிப்பு, அங்கு கல்வி பயிலும் 300க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மாணவர்களை ஒன்றிணைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற மாநாடு முழுவதும் தனது தரப்புக்கு 24 மேற்பட்ட முன்மொழிவு ஆவணங்கள் வழங்குநர்களிடமிருந்து கிடைத்ததாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மேம்பாடு, நலன், ஆன்மிகம் மற்றும் நிர்வாகம் ஆகிய அம்சங்களை இந்த முன்மொழிவு உள்ளடக்கியதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இந்த மாநாடு மத்திய கிழக்கில் உள்ள சிலாங்கூர் மாணவர்களை ஒன்றிணைத்து விவாதிக்கவும் அவர்களிடமிருந்து விளக்கங்களைக் கேட்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது” என்று அவர் X இல் எழுதினார்.

இன்று மலேசியாவிலும் உலகிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பயிற்றுநர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர் மாநாட்டில் கோடிட்டுக் காட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அமிருடின், மாணவர் குடியிருப்புகளுக்குச் சென்றதுடன் சிலாங்கூர் மாணவர்களுடான உரையாடலிலும் பங்கேற்றார்.

அவர் மன்னர் அப்துல்லாவின் முக்கிய ஆலோசகர் இளவரசர் காசி முஹம்மதுவுடன் ஒரு சந்திப்பை நடத்தினார் மற்றும் ஜோர்டானில் உள்ள மலேசியர்களுடனான நட்பு விழாவில் கலந்து கொண்டார்.


Pengarang :