ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமதுவுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

ரியாட், அக் 22- சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இங்குள்ள அல்-யமாமா அரண்மனையில் நேற்று சந்தித்தார்.

சவூதி அரேபியாவின் ஏற்பாட்டில் கடந்த  வெள்ளியன்று நடைபெற்ற ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் முதலாவது உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டுள்வதற்காக இங்கு வந்துள்ள  அன்வார், சவூதி பட்டத்து இளவரசரின் பிரத்தியேக அழைப்பின் பேரில் இந்த சந்திப்பை நடத்தினார்.

கடந்த 7ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் பாலஸ்தீன- இஸ்ரேல் போர் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். 

காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல் மற்றும் அடக்குமுறை குறித்து பிரதமர் அன்வாரும் பட்டத்து இளவரசர் முகமதுவும் ஒருமித்த குரலில் தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

இரு நாட்டுத தலைவர்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் மேம்பாடு உள்ளிட்ட பரபஸ்பட நலன்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவூதி சென்றுள்ள நிதியமைச்சருமான அன்வார், அந்நாட்டுடன் இரு வழி உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தார்.


Pengarang :