ECONOMYSELANGOR

உள்ளூர் உணவுகளைப் பிரபலப்படுத்தும் நோக்கிலான சிலாங்கூர் உணவு விழா அடுத்தாண்டும் தொடரும்

ஷா ஆலம், அக் 22– உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மத்தியில் உணவு வகைகளைப் பிரபலப்படுத்தும் நோக்கிலான சிலாங்கூர் உணவுத் திருவிழா அடுத்தாண்டிலும் தொடர்ந்து நடத்தப்படும்.

அடுத்தாண்டு நடைபெறும் இந்த விழாவில் நாசி அம்பேங் மற்றும் சாத்தே தவிர இதர வகையான உணவுகளும் முன்னிலைப்படுத்தப்படும் என்று கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா கூறினார்.

இந்த உணவு விழாவை அடுத்தாண்டில் அவானி சிப்பாங்கில் நடத்தவிருக்கிறோம். சிலாங்கூரிலுள்ள இதர இன உணவு வகைகளையும் நாம் கவனத்தில் கொள்ளவிருக்கிறோம். பாரம்பரிய உணவுகளாக பதிவு செய்யக்கூடிய உணவுகளும் அதில் இருக்கும். அது குறித்து நாங்கள் ஆராயவிருக்கிறோம் என அவர தெரிவித்தார்.

இங்குள்ள டி பல்மா ஹோட்டலில்  நேற்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில கலை, கலாசார விருதளிப்பு நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தவிர, ரோங்கெங் நடனத்தை சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய நடனமாக அரசு பதிவேட்டில் இடம் பெறச் செய்வதற்காக செயலறிக்கையைத் தயாரிக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :