ECONOMYMEDIA STATEMENTPBT

பள்ளிகளில் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு நிகழ்வுகளில் தீவிரவாத, வன்முறை அம்சங்களுக்கு தடை

கோலாலம்பூர், அக் 28- இம்மாதம் 29 முதல் நவம்பர் 3 வரை பள்ளிகளில் நடைபெறவிருக்கும் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு வாரத்தில் தீவிரவாத மற்றும் வன்முறை சார்ந்த கூறுகளுக்கு கல்வியமைச்சு தடை விதித்துள்ளது.

இந்த ஒருமைப்பாட்டு வாரத்தில் ஆயுங்களின் மாதிரிகள், சினமூட்டும் மற்றும் மோதலுக்கு தூண்டும் அம்சங்கள் கொண்ட சின்னங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த நிகழ்வின் போது மனிதாபிமான கூறுகளைக் அடிப்படையாகக் கொண்ட அம்சங்களை குறிப்பாக அமைதி தொடர்பான காணொளிகளை திரையிடுவது, மனிதாபிமான கவிதைகளைப் படைப்பது, அமைதியை கருவாக கொண்ட ஓவியங்களை வரைவது, பாலஸ்தீன மக்களுக்காக நிதி திரட்டுவது போன்ற நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அது தெரிவித்தது.

இந்த ஒருமைப்பாட்டு வார நிகழ்வுக்கான ஏற்பாட்டு நிபந்தனைகளை கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து கல்விக்கூடங்களும் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் மத்தியில் உயரிய பண்புக் கூறுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது, சகிப்புத்தன்மையைப் பேணுவது, அன்பு காட்டுவது, ஒருவரை ஒருவர் மதிப்பது போன்ற பண்புகளை போதிக்கும் களமாக இந்த ஒருமைப்பாட்டு வாரம் பயன்படுத்தப்பட வேண்டும் அமைச்சு வலியுறுத்தியது.

பள்ளி ஒன்றில் நடைபெற்றதாக நம்பப்படும் தீவிரவாதக் கூறுகள் கொண்ட நிகழ்வு தொடர்பான காணொளி தொடர்பில்  பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அது கல்வியமைச்சு குறிப்பிட்டது.


Pengarang :