ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் குடியிருப்பாளர்கள்  பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வேன்- அமைச்சர் சிவகுமார் வாக்குறுதி

கோலாலம்பூர், நவ 5-  டமான்சாரா புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் 100 குடும்பங்களின் பிரச்சனைக்கு தீர்வு காண போராடுவேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.

புக்கிட் கியாரா தோட்டம் மேம்பாட்டு திட்டத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட போது அங்கு வாழ்ந்த 100 குடும்பங்களுக்கு ரூமா பாஞ்சாங் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

கடந்த 42 ஆண்டுகளாக இந்த 100 குடும்பங்களுக்கும் ரூமா பாஞ்சாங் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் தோட்டப் பாட்டாளிகள் எதிர் நோக்கி இருக்கும் வீடமைப்பு திட்டம் தொடர்பில் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோவிடம் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று அவர் சொன்னார்

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு புதிய விடிவுகாலம் பிறக்க ஹன்னா இயோவுடன் இணைந்து ஒத்துழைக்க தயார் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சர் சிவகுமார் தலைமை தாங்கினார்.


Pengarang :