ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மூன்று மணி நேரத்திற்குள் நல்ல லாபம் கிடைக்கும் என நம்பிய முதலீட்டால்  RM846,500  ஏமாற்றம்

ஜொகூர் பாரு, நவ. 9: ஒரு நிறுவனத்தின் இணையதளம் மூலம் மூன்று மணி நேரத்திற்குள் நல்ல லாபம்  கிடைக்கும் என நம்பி முதலீட்டில் ஏமாற்றப் பட்டதால், ஒருவருக்கு RM846,500 இழப்பு ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை வழக்கறிஞர் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 49 வயது நபர் புகார் கொடுத்துள்ளார் என ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் சோஹைமி இஷாக் கூறினார். 

 “கடந்த செப்டம்பர் 16 அன்று, பாதிக்கப்பட்டவருக்கு டிஎம்ஜிஎம் “TMGM“ எனப்படும் ஒரு நிறுவனத்தின் இணையதளம் மூலம் US$18,888 முதலீடு செய்தால் மூன்று மணி நேரத்திற்குள் US$100,000 லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“டிஎம்ஜிஎம் நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர் அவர்கள் கூறும் லாபத்தை நம்பினார்,” என்று முகமட் சோஹைமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 26 வரை மூன்று மலேசிய வங்கிக் கணக்குகளில் மொத்தம் 846,500 பணம் செலுத்தியதாக அவர் கூறினார். ஆனால் பணம் செலுத்திய பிறகு பாதிக்கப்பட்டவர் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையைப் பெறவில்லை, அதனால், அவர் ஏமாற்றப்பட்டதாக நம்பினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக முகமட் சோஹைமி கூறினார்.

 

– பெர்னாமா


Pengarang :