ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல சிலாங்கூரில்   தீபாவளி திறந்த இல்ல  உபசரிப்பு

செய்தி  சு. சுப்பையா
கோல சிலாங்கூர்.நவ.10- கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக நடந்தேறியது. தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
அத்தொகுதியின் மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் தீபன் சுப்ரமணியம் தொகுதியின் சார்பில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். கோல சிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர் திருமதி நந்தகுமாரி, புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற இந்திய சமுதாய தலைவர் கலைக்குமார் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நம்பிக்கை கூட்டணியை சேர்ந்த அமனா தலைவர்கள், அம்னோ தலைவர்கள், சீன  புது கிராமத் தலைவர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
அனைவருக்கும் பிரியாணியுடன் கோழி இறைச்சி மற்றும் காய்கறி உணவுகளும் பரிமாறப்பட்டது. அதே வேளையில் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
கலை நிகழ்ச்சி பரத நாட்டியத்துடன் தொடங்கியது. இந்த கோல சிலாங்கூர் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு டத்தோ ஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி தலைமையில் வான வேடிக்கை வெடித்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அதிகாரப்பூர்வ தொடக்க உரையும் ஆற்றினார். குறுகிய காலத்தில் தீபன் சிறப்பாக ஏற்பாடு செய்ததை வெகுவாக பாராட்டினார். அதே வேளையில் திரளாக கலந்து கொண்ட பொது மக்களையும் பாராட்டினார்.
மத்திய அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை குறித்த விவாதம் மக்களையில் சிறப்பாக நடைபெறுகிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டை ஒட்டி சிறப்பாக வரவு செலவு திட்டத்தை சமர்பித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வெகுவாக பாராட்டினார்.
தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது சட்டமன்றத்தில் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சமர்ப்பித்துள்ளார். இந்த மாநில வரவு செலவு திட்டம் குறித்து தீபன் அனைவருக்கும் எடுத்துக் கூறுவார் என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் விருந்து உபசரிப்பிலும் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர்.
நாடறிந்த நல்ல கலைஞர் கொக்கோ நந்தா தலைமையில் உள்ளூர் பாடல்களும் தமிழ்த் திரையுலக பாடல்களும் சிறப்பாக படைக்க பட்டன.
சிறப்பு அதிர்ஷ்ட குழுக்கு நடத்தப்பட்டது. 10 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதே போல் உணவு கூடைகளும் வழங்கப் பட்டன.

Pengarang :