ECONOMYMEDIA STATEMENTSUKANKINI

எம்.பி.பி.ஜே.-கேபி.எஸ்.  ஏற்பாட்டில் பாரா சுக்மா விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு

ஷா ஆலம், நவ 27-  வரும் 2024ஆம் ஆண்டிற்கான பாரா  மலேசியா விளையாட்டுப் போட்டியில்  (பாரா சுக்மா)  சிலாங்கூரைப் பிரதிநிதிக்கக்கூடிய புதிய விளையாட்டாளர்களைத் தேடும் நோக்கில் கடந்த வாரம் நடத்தப்பட்ட நிகழ்வில் 300 மாற்றுத்திறனாளிகள்  கலந்துகொண்டனர்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் கிளானாஜெயா,  டேவான் டி’கிளானா, எஸ்.எஸ்.7இல் நடைபெற்ற  இந்த நிகழ்வில்  நீச்சல், மேசைப் பந்து, பளு தூக்குதல், போசியா, வில்வித்தை மற்றும் சதுரங்கம் ஆகிய ஆறு வகையான விளையாட்டுகள் இடம் பெற்றன.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடனான இந்நிகழ்வு  உள்ளூர் சமூகத்தின் திறன்கள் மற்றும் சம்பந்தப்பட்டத தரப்பினரின் விளையாட்டுத் தேவைகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று துணை  டத்தோ பண்டார் அஸ்னான் ஹாசன் கூறினார்.

மேலும், அனைவருக்கும் விளையாட்டு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற தேசிய விளையாட்டுக் கொள்கையின்படி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள்  மற்றும் சாதாரண சமூகத்தினரிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கவும் இத்திட்டம் உதவுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த 2008 முதல் 2019 வரை மலேசிய பாரா ஒலிம்பிக் மன்றத்துடன் இணைந்து பாரா எம்.பி.பி.ஜே. விழா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுகளில் போசியா, பூப்பந்து, சக்கர நாற்காலி கூடைப்பந்து, சக்கர நாற்காலி டென்னிஸ், கால்பந்து (பார்வை குறைபாடு,
குடுங் (கற்றல் குறைபாடு) மற்றும் சதுரங்கம் ஆகியவை அடங்கும்


Pengarang :