ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இந்திய உணவக உரிமையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்க பரிசீலனை!   அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் டிச 7- இந்நாட்டில் உள்ள இந்திய உணவக உரிமையாளர்கள் தங்களது தொழில் திறன்களை மேலும் வளர்ந்து கொள்ள எச்.ஆர்.டி.கோர்ப்  (HRD Corp)  மூலம் நிர்வாக பயிற்சி திட்டங்கள் வழஙகுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

அதேசமயம் இந்திய உணவக உரிமையாளர்களுக்கு திவேட் தொழில்திறன் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

சமையல் சம்பந்தப்பட்ட தொழில் திறன் பயிற்சிகள் மூலம் இந்திய உணவக உரிமையாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களை உருவாக்க முடியும்.

இனியும் அந்நிய தொழிலாளர்கள்  நம்பி இருப்பதை காட்டிலும் தீவேட் தொழில் திறன் பயிற்சிகள் மூலம் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க முடியும் என்றார் அவர்.

மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி நேற்று நடைபெற்ற பிரிமாஸ் ஆண்டு கூட்டத்தில் பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

மாற்று தொழிலாளியை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப் பட்டுள்ளது.

மாற்றுத் தொழிலாளியை பணியமர்த்த அனுமதிக்கும் முன் மொழிவு பரிந்துரை மனிதவள அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு கூட்டுக் குழுவில் விவாதிக்கப்படும்.

எச்ஆர்டி கோர்ப் மூலம் நிர்வாக பயிற்சி மற்றும் தீவேட் மூலம் சமையல் தொழில் திறன் பயிற்சி தேவை என்று பிரிமாஸ் முன் வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக மிக விரைவில் அவர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.

பிரிமாஸ் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்று அவர் சொன்னார்.

மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :