ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செந்தோசா சட்ட மன்ற தீபாவளி திறந்த இல்ல உசரிப்பில்  2,000 பேர் திரண்டனர்.

செய்தி ; சு சுப்பையா
செந்தோசா.டிச.10-  செந்தோசா சட்ட மன்றத் தொகுதியில் கோலா களமாக தீபாவளி திறந்த இல்ல உசரிப்பு நடை பெற்றது.  அதில்  2,000 பேர் திரண்டனர். இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கொண்டாட்டத்தை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தலைமையில் நடை பெற்றது.
இந்திய பாரம்பரிய உணவு வகைகள் பரி மாறப்பட்டன. வெகுவிமரிசையாக கொண்டாடப் பட்டது. மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, கோத்த ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் விவசாயத் துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ மாட் சாபு ஆகியோர் உருமி மேளம் முழங்க பிரதான இருக்கைக்கு அழைத்து வரப் பட்டனர். ஸ்ரீ உமா புத்திரன் உருமி மேளம் குழுவினர் உருமி மேளம் வாசித்து பொது மக்களுக்கு உட்சாகம் கொடுத்தனர்.
மாலை 7.30 மணிக்கு குத்து விளக்கு ஏற்றி கலை நிகழ்ச்சி தொடக்கி வைக்கப் பட்டது. தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம், சிலாங்கூர் மாநில கீதம் ஒலிக்கப் பட்டது.  8.00 மணிக்கு கிள்ளான் மா நகர மன்ற உறுப்பினர் மகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர் தீபாவளி விருந்து தொடங்கியது.  வீணை தமிழ் இசை கட்சேரி 20 நிமிடம் நடை பெற்றது. சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் உரை. தொடர்ந்து விவசாயத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ மாட் சாபு உரையாற்றிய  பின் இறுதியாக மந்திரி புசார் உரை  நிகழ்த்தினார்
தொடர்ந்து செந்தோசா சட்ட மன்றத்தில் உள்ள ஆலயங்களுக்கு சட்ட மன்ற உறுப்பினரின் பிரத்தியேக மானியம் ரி.ம. 35,000.00 வழங்கப் பட்டது. இதில் மொத்தம் 11 இந்து ஆலயங்களின் தலைவர்கள் மந்திரி புசார் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் முன்னிலையில் பெற்றுக் கொண்டனர்.
செந்தோசா சட்ட மன்றத் தொகுதியில் உள்ள கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்தித் சமுதாயத் தலைவர், அலுவலக அதிகாரி ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர்.
தொடர்ந்து 20 அதிஸ்ட குழுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. இரவு 10.00 மணிக்கு மேலும் தீபாவளி விருந்து உபசரிப்பு நடை பெற்றது.

Pengarang :