ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வேலையின்மை விகிதத்தை அடுத்தாண்டு மூன்று விழுக்காடு  குறைக்க இலக்கு ! அமைச்சர் சிவக்குமார் தகவல்

புக்கிட் ஜாலில், டிச 11- இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 3.4 விழுக்காடுடன் ஒப்பிடுகையில் மனித வள அமைச்சு அடுத்த ஆண்டு வேலையின்மை விகிதத்தை மூன்று சதவீதமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. ஒரு வருடத்திற்குள் இந்த இலக்கை எட்ட முடியும் என்று மனிதவள அமைச்சர் அமைச்சர் வ. சிவக்குமார்  நம்பிக்கைத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு வேலையில்லா விகிதத்தை மூன்று சதவீதமாக குறைக்கும் இலக்கு பொருளாதாரத்துக்கு  நல்லது. அந்த விகிதம் முழு வேலை  வாய்ப்பை அடைய கணக்கிடப் படுகிறது என்று புக்கிட் ஜாலில் வளாகத்தில் நடைபெற்ற மடாணி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

நேற்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மடாணி  அரசாங்கத்துடன் ஓர் ஆண்டு நிறைவு விழாவில் மனித வள அமைச்சர் சிவக்குமார் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க, தொழில்முறை துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தனது அமைச்சு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.


Pengarang :