ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

துணையமைச்சர் டத்தோ ரமணன்  வழிபாட்டு தளங்களுக்கு  ரி.ம. 220,000 நிதியுதவி

செய்தி ; சு.சுப்பையா

சுங்கை பூலோ .டிச.17- சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வழிபாட்டு தளங்களுக்கு துணையமைச்சர் டத்தோ ரமணன் தனது சொந்த நிதியாக ரி.ம. 220,000.00 வழங்கியுள்ளார் என்று சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியின் அலுவலக அதிகாரி தமிழ் செல்வம் தெரிவித்தார்.

சுங்கை பூலோ வட்டாரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபை சேவையாற்றி வருகிறது. இத்திருச்சபையின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் துணையமைச்சர் டத்தோ ரமணனின் பிரதிநிதியாக தமிழ் செல்வம் கலந்து கொண்டார். இத்திரு சபையின் முதன்மை பொறுப்பாளர் அந்தோனியை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது டத்தோ ரமணன், தேர்தலில் வெற்றி பெற்றால் தனது  நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஊதியத்தை வழிபாட்டு தளங்களுக்கு கொடுத்து விடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

அந்த வகையில் கடந்த ஓராண்டாக சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், புத்த ஆலயங்கள், பள்ளிவாசல்கள், சீன ஆலயங்கள் என்று எந்த வித பாகுபாடின்றி நிதியுதவி செய்து வருகிறார்.

அதிகபட்சமாக ரி.ம. 8,000.00 வரை பல வழிபாட்டு தளங்களுக்கு நிதியுதவி செய்துள்ளார்.

அந்த வகையில் சுங்கை பூலோ தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபையின் சேவையையும் டத்தோ ரமணின் பார்வைக்கு கொண்டு சென்று நிதியுதவி கிடைக்க ஆவன செய்வேன் என்று தமிழ்ச்செல்வன் கூறினார்.


Pengarang :