ஷா ஆலம், டிச 17- நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து ஷா ஆலம் மாநகரின் பல முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட சாலைகளில் செக்சன் 9, பெர்சியாரான் கயாங்கான், (கான்கார்ட் ஹோட்டலுக்கு முன்புறம்) மற்றும் செக்சன் 13, பெர்சியாரன் சுக்கான் ஆகியவையும் அடங்கும் என அது கூறியது.
செக்சன் 16, பெர்சியாரான் புஸ்பாகோம், செக்சன் 5, பெர்சியாரான் மஸ்ஜித், ஜாலான் காப்பார், செக்சன் 27 ஆகிய பகுதிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சாலைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் மாற்று வழியைக் கண்டறிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அது தெரிவித்துள்ளது.
ஷா ஆலமில் வெள்ளம் தொடர்பான அவசர உதவிகளுக்கு, பொதுமக்கள் 03-5510 5811 என்ற எண்ணில் பந்தாஸ் விரைவு உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.