ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு நெரிசல்மிக்க மற்றும் விபத்து நிகழும் பகுதிகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

கோலாலம்பூர், டிச 22- கிறிஸ்துமஸ் பெருநாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நெரிசல் மிகுந்த மற்றும் அதிக விபத்துகள் நிகழும் பகுதிகளில போக்குவரத்து போலீசாரை அரச மலேசிய போலீஸ் படை நிறுத்தவுள்ளது.

பெருநாள் மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ முகமது அஸ்மான் சப்ரி அறிக்கை ஒன்றில் கூறினார்.

வரும் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரையிலும் புத்தாண்டு விடுமுறையின் போதும் பொது மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் காரணத்தால் நெடுஞ்சாலைகளை 20 லட்சம் வாகனங்கள் வரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப் படுவதாக நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்கள் கணித்துள்ளதாக  அவர் குறிப்பட்டார்.

நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் வாகன நெரிசலை விரைந்து தணிக்கும் பணியில் நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் போக்குவரத்து போலீசார் இணைந்து செயல்படுவர் என்றும் அவர் சொன்னார்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது அவசர சூழல்களை எதிர் நோக்கும் பட்சத்தில் போக்குவரத்து தகவல்களைப் பின்பற்றி நடக்கும் அதேவேளையில் தயார் செய்யப்பட்டுள்ள வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

தங்களின் பாதுகாப்பையும் சாலையைப் பயன்படுத்தும் இதர வாகனமோட்டிகளையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பொது மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியை திட்டமிடும் அதேவேளையில் சாலை விதிகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என  அவர் வலியுறுத்தினார்.


Pengarang :