ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் உள்பட நான்கு மாநிலங்களில் வெள்ளம்- 199 நிவாரண மையங்களில் 18,735 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், டிச 26- வெள்ளம் காரணமாக நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 18,735 பேர் 199 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தில் மிக அதிகமாக 11,216 பேர் (3,444 குடும்பங்கள்) 72 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட  சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து.

இம்மாநிலத்தில் குவாங் மூசாங், ஜெலி, கோல கிராய், மாச்சாங், பாசீர் மாஸ், தானா மேரா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளம் தொடர்பான ஒரு மரணச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அது கூறியது.

திரங்கானுவில் ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வேளையில் அங்கு 1,791 குடும்பங்களைச் சேர்ந்த 6,724 பேர் 110 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

பகாங் மாநிலத்தின் ரவுப் மற்றும் லிப்பிஸ் ஆகிய இரு மாவட்டங்கள் வெள்ள பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இங்கு 187 குடும்பங்களைச் சேர்ந்த 791 பேர் 16 துயர் துடைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரில் வெள்ளம் காரணமாக கோல லங்காட்டில் ஒரு துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டுள்ள வேளையில் அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தங்கியுள்ளனர்.


Pengarang :