ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கிராமத்தில் வெள்ளம், திருட்டை தவிர்க்க ஆண்கள் வீட்டை காக்கின்றனர்.

தும்பாட், டிச.30: தங்கள் வீடுகளின் பாதுகாப்பு  காரணமாக, வெள்ளம் எறிய பின்பும் கம்போங் கபுங் சாவாவில் வாழும் பல ஆண்கள் தங்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அருகே உள்ள தற்காலிக தங்கும் மையங்களுக்கு  அனுப்பி வைக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அதை அவர்கள் மேற்கொள்வதாக  குடியிருப்பாளர் ஹிஷாம் சாமா, 45, கூறுகிறார். திருட்டிலிருந்து தங்கள் வீடுகளை பாதுகாக்க  இது  அவசியம் என்கிறார்.

எங்கள் கிராமம் எல்லைக்கு (மலேசியா-தாய்லாந்து) அருகில் இருப்பதால் நாங்கள் கவலைப்படுகிறோம்.”வழக்கமாக பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்து செல்வார்கள், ஆனால் இதுபோன்ற வெள்ளம் ஏற்படும் காலத்தில்  பாதுகாப்பு படையினர்  வருகை குறைவு என்கிறார். இன்னும் பல பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டியிருப்பதால் அவர்கள் அதை வழங்க முடியாது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்,

எனவே வெள்ளத்தின் போது எங்கள் சொந்த கிராமத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம், ”என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அருகே உள்ள தற்காலிக தங்கும் மையங்களுக்கு (பிபிஎஸ்)  அனுப்ப பட்டாலும் பெரும்பாலான வீடுகளில் குடும்பத் தலைவர் அல்லது மகன்கள் கூட  வீட்டை பாதுகாக்கின்றனர் என்று பெர்னாமா கண்டறிந்துள்ளது.

இதற்கிடையில், 55 வயதான வான் சௌஃபி பெசார், குடியிருப்பாளர்கள் வீட்டில் இருக்கும் போது உணவுப் பொருட்களை வெளியே சென்று வாங்குவதற்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் சொந்தமான படகுகளை நம்பியிருப்பதாக கூறினார். “நான் கிராமத்திற்கு வெளியே உணவு வாங்க படகில் செல்வேன். பொதுவாக நான் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவேன்.
“வீட்டில் இன்னும் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி இருப்பதால் என்னால் இன்னும் சமைக்க முடியும் என்றார்.

வெள்ள காலங்களில் வெளியே செல்வது மிகவும் கடினம், ஏனென்றால்  எங்கள் கார் கிராம மசூதியில் நிறுத்தப் பட்டிருப்பதால் நாங்கள் நடக்க வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பெங்குலு உதவியாளர் சாரி மூசா, சம்பந்தப்பட்டவர்களுக்கு, வீடுகளில்  அடைப்பட்டு உள்ளவர்களுக்கு மற்றும் தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்)  உதவிகளை  பல குடியிருப்பாளர்கள் நம்புவதாக கூறினார்.
தற்போது, அப்பகுதி முழுவதும் தண்ணீருக்குள் இருப்பதால், இங்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும்

“யாராவது உதவத் தயாராக இருந்தால், படகைப் பயன்படுத்தி பொருத்தமான இடத்தில் குடியிருப்பாளர்களுக்கு உதவி செய்ய  ஏற்பாடு செய்யலாம்  என்றார்.


Pengarang :