ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இரு செகி ஃபிரெஷ் பேரங்காடிகள் உள்பட ஆறு இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், டிச 31- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை நான்கு இடங்களில் காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மலிவு விற்பனை கம்போங் பத்து 13, காம்ப்ளெக்ஸ் முக்கிம் உலு லங்காட் (டுசுன் துவா தொகுதி), தாமான் கெமிலாங், சமூக மண்டபம் (டெங்கில் தொகுதி), டத்தோ அகமது ரசாலி சமூக மண்டபம் (செமெந்தா தொகுதி), சுங்கை பூலோ கம்போங் மிலாயு (பாயா ஜெராஸ் தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

இது தவிர, கிள்ளான், சுங்கை ஊடாங் மற்றும் ரவாங், பண்டார் தாசேக் புத்ரி ஆகிய இடங்களில் உள்ள செகி ப்ரெஷ் கிளைகளிலும் பொது மக்கள் மலிவு விலையில் பொருள்களை வாங்கலாம்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு இதுவரை 4 கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 3000 இடங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :