MEDIA STATEMENTPBT

118 இந்திய குடும்பங்களின் 30 ஆண்டு கால போராட்டம்.

செய்தி சு.சுப்பையா

சுபாங்.டிச.30- சுபாங் வட்டாரத்தில் உள்ள பூங்கா ராயா தொடர் வீடுகளில் கடந்த 1993 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட 118 ஏழை இந்தியக் குடும்பங்கள் சொந்த வீடு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? பெரும் ஏக்கத்துடன் இந்தியர்கள். எங்களது இந்த வீட்டு பிரச்சனைக்கு  எப்போது தீர்வு ? என்று அக் குடியிருப்பு பகுதியின் தலைவர் கணேசன் வேதனை.

1993 ஆம் ஆண்டு அன்றைய அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாங்கள் வாழ்ந்த புறம்போக்கு பகுதியை காலி செய்து இந்த தொடர் வீடுகளை கட்டிக் கொடுத்து எங்களை குடி அமர்த்தினார். 18 மாத காலத்தில் உங்களுக்கு சொந்த வீடு கிடைக்க ஆவன செய்கிறேன் என்று வெற்று வாக்குறுதியை கொடுத்து எங்களை ஏமாற்றி விட்டார்.

இந்த மோசமடைந்த தொடர் வீடுகளில் 30 ஆண்டுகளை கடத்தி  சொல்ல  முடியாத  கொடுமைகளுக்கு இடையில் வாழ்ந்து வருகிறோம்.

ஆரம்பத்தில் 74 குடும்பங்கள் இங்கு குடி அமர்த்தப்பட்டனர். கடந்த 30 ஆண்டு காலத்தில் இந்த தொடர் வீட்டுக்கு வந்த முதல் தலைமுறையினர் பெரும்பாமையானோர்கள் மரணித்து விட்டனர். 74 குடும்பங்கள் இன்று 118 குடும்பங்களாக இருக்கிறோம்.

பல வீடுகள் பழுதடைந்து விட்டது. இந்த வீட்டை முறையாக சீரமைத்து கொடுக்காததால் ஒரு சிலர் அருகில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டிலும் மேலும் சிலர் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

18 மாதக் காலம் என்று வாக்குறுதியுடன்  குடியமர்த்தப்பட்ட  நாங்கள் 2004 ஆம் ஆண்டு மேம்பாட்டாளர் மற்றும் இவ்வாட்டார அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்போடு புதிய வீட்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தப்படி, பல்வேறு காரணங்களால் எங்களுக்கு முறையான வீடு கிடைக்கவில்லை.

2008 ஆம் ஆண்டு சிலாங்கூர் புதிய ஆட்சி மலர்ந்தது. இந்த ஆட்சியில் மேம்பாட்டாளர்கள் தொடர்ந்து கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்றாமல் எங்களை அலை கழித்து வருகின்றனர். பல நீதிமன்ற நடவடிக்கைகளையும் தொடர்ந்து சந்தித்து விட்டோம். ஆனால் எங்களது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று அவர் மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்தார்.

30 ஆண்டு கால தங்களது சொந்த வீடு போராட்டத்திற்கு உதவ ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும் என்று கணேசன் மற்றும் சில தாய்மார்களும் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.


Pengarang :