ECONOMYMEDIA STATEMENT

அலுவலக நேரத்திற்குப் பிறகு அனைத்து கார் நிறுத்துமிடங்களும் இலவசம் கிடையாது- டி.பி.கே.எல். விளக்கம்

கோலாலம்பூர், டிச. 31 –  தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கார் நிறுத்துமிடங்களும்  அலுவலக நேரத்திற்குப் பிறகு இலவசமாகக் கிடைக்காது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம்  (டி.பி.கே.எல்.) தெளிவுபடுத்தியுள்ளது.

கோலாலம்பூரில்  உரிமம் பெற்ற 11 கார் ஜாக்கி பார்க்கிங் வசதிகள் உள்ளதாக மாநகர் மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

புக்கிட் பிந்தாங்கில் வாகன நிறுத்துமிடங்களை தங்கள் கட்டுப்பட்டில் வைத்திருக்கும் தரப்பினர் குறித்து சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய புகார் தொடர்பாக கருத்துரைத்த மாநகர் மன்றம்,  ஜாலான் சுல்தான் இஸ்மாயிலின் ஒரு சாலைக்கு அடுத்ததாக உள்ள  திறந்த கார் நிறுத்துமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தது.

இந்த கார் பார்க்கிங் மாநகர் மன்றத்தின்  கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இதற்கான  கட்டணம் அலுவலக நேரங்களில் மாலை 5 மணி வரை பொருந்தும். அலுவலக நேரத்திற்குப் பிறகு எட்டு வாகன நிறுத்துமிடங்களில்  வாலட் கார் நிறுத்தச் சேவைகளை நிர்வகிக்க ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்று  அறிக்கை ஒன்றில் மாநகர் மன்றம்  கூறியது.

வாலட் சேவையைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க அது பற்றிய தகவல் அடையாளங்களைத் தாங்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் உடனடியாகக் நிறுவுமாறு சம்பந்தப்பட்ட வாலட் சேவை நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியது.

முன்னதாக,  15.00 வெள்ளி பார்க்கிங் கட்டணத்தை செலுத்த மறுத்ததால் நபர் ஒருவரின் கார் கீறி சேதப்படுத்தப்பட்டதைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்ளில் பகிரப்பட்டது தொடர்பில் மாநகர் மன்றம் இந்த விளக்கத்தை வெளியிட்டது.


Pengarang :