ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதல்- அக்டோபர் 7 முதல் 4,119 பள்ளி மாணவர்கள் பலி

அங்காரா, ஜன 3 – கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல்
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இடைவிடாத தாக்குதல்கள்
காரணமாக பாலஸ்தீனத்தில் 4,119 பள்ளி மாணவர்கள்
உயிரிழந்துள்ளதோடு மேலும் 7,536 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தவிர கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியது முதல்
மேற்கு கரையில் அடைக்கலம் நாடியவர்கள் மீது நடத்தப்பட்ட
தாக்குதல்களில் 37 மாணவர்கள் பலியான வேளையில் மேலும் 282 பேர்
காயங்களுக்குள்ளாயினர்.

மேலும், இந்த கோரத் தாக்குதல்கள் 221 ஆசிரியர்கள் மற்றும்
பணியாளர்கள் மரணமடைவதற்கும் 703 பேர் காயமடைவதற்கும்
காரணமாக அமைந்துள்ளது என்று பாலஸ்தீன கல்வி அமைச்சை
மேற்கோள் காட்டி வாஃபா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காஸா முனையில் 343 பள்ளிகளும் மேற்கு கரையில் 38 பள்ளிகளும்
இந்த போரில் நிர்மூலமானதாக அது தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும்
தாக்குதல்களில் இதுவரை 21,978 பேர் உயிரிழந்துள்ளதோடு 57,697 பேர்
காயமுற்றுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும்
சிறார்களாவர்.


Pengarang :