Notis penutupan digantung pada pintu masuk oleh Majlis Bandaraya Shah Alam (MBSA) ketika tinjauan di Tanah Perkuburan Islam Seksyen 21 Shah Alam pada 21 MEI 2020. MBSA telah menampal notis dipintu masuk memaklumkan bahawa mulai 22 Mei 2020 tanah perkuburan ini akan ditutup bagi aktiviti ziarah buat sementara waktu bagi mengelakkan orang ramai datang beramai-ramai pada Hari Raya Aidilfitri nanti. FOTO: BERNAMA
ECONOMYMEDIA STATEMENT

ஷா ஆலம் மாநகர் மன்றம் எச்சரிக்கை- சர்ச்சைக்குரிய மின் விளம்பரம் நீக்கம்

ஷா ஆலம், ஜன 12- ராட்ஸத மின் விளம்பரப் பலகையில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் அகற்றியது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2007ஆம் ஆண்டு விளம்பரத் துணைச் சட்டத்தின் விதிகளை முறையாக பின்பற்றக் கோரும் எச்சரிக்கைக் கடிதத்தை மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக அதன் வர்த்தக மற்றும் பொது உறவுத் துறை கூறியது.

அந்த மின் விளம்பரப் பலகையில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அந்நிறுவனம் மாநகர் மன்றத்தின் அனுமதியின்றி சீன மொழி காணொளியை ஒளிபரப்பியது தொடக்ககட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இத்தகையச் செயல்கள் பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் மின் விளம்பரப் பலகைகளில் சோதனை முறையில் காட்சிகளை ஒளிபரப்புவதற்கு முன்னர் முறையான அனுமதியைப் பெறும்படி மாநகர் மன்றம் அறிவுறுத்தியது.

பொது இடங்களில் ராட்ஸத விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாநகர் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், சம்பந்தப்பட்ட விளம்பரத்திற்கு (காணொளி) முறையான உரிமம் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு அக்காட்சிகளை ஒளிபரப்புவதற்கு முன்னர் மாநகர் மன்றத்திடம் காட்டி அனுமதியையும் பெற வேண்டும். என அது கேட்டுக் கொண்டது.

“வெல்கம் டு ஷங்காய் ஷா ஆலம் @ சீனா“ எனும் தலைப்பிலான அந்த 31 வினாடி காணொளி ஷா ஆலமில் சாலையோரம் உள்ள ராட்ஸத மின்-விளம்பரப் பலகையில் ஒளிபரப்பானது.


Pengarang :