பத்துமலை மேம்பாட்டு பணிகளுக்கு  3.5 கோடி ரிங்கிட் நிதித் தேவை  டான் ஸ்ரீ நடராஜா கோரிக்கை

செய்தி. சு.சுப்பையா

பத்துமலை.ஜன.19-  பத்துமலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட பிரமாண்டமான பொது மண்டபம் தேவை.மேலும் இந்தியர்கள் கலாச்சார அரங்கமும் கட்ட வேண்டும். இதற்கு குறைந்தது 3.5 கோடி ரிங்கிட் தேவைப் படுகிறது என்ற கோரிக்கையை மனித வளத்துறை அமைச்சரை வரவேற்று பேசிய போது  கோலாலம்பூர் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ நடராஜா  முன் வைத்தார்.

16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் பத்துமலை முருகன் கோவிலை தொடர்ந்து பராமரிக்க பெரும் நிதி தேவைப்படுகிறது. இக்கோவிலில் இந்துக்கள் மட்டும் வழிபாடு செய்யவில்லை, தினந்தோறும் குறைந்தது 500 க்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகள் வந்து போகின்றனர்.

அவர்களின் தேவைக்காக கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதை சுத்தம் செய்ய இந்திய தொழிலாளர்கள் கொண்டு வரப் பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆலயத்தை தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ள பெரும் நிதி தேவைப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு மின்சாரக் கட்டணம் ரி.ம
40,000.00 செலவாகிறது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ சப்ரி இஸ்மாயில் ஆலய நிர்வாக செலவுக்காக 20 லட்சம் ரிங்கிட் மானியமாக கொடுத்தார்.

இதே போல் கடந்த ஆண்டு மனித வளத்துறை அமைச்சராக இருந்த சிவக்குமார 10 லட்சம் ரிங்கிட் மானியமாக வழங்கினார் என்று டான் ஸ்ரீ நடராஜா கூறினார்

நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய தலங்களில் ஒன்றாக பத்துமலை விளங்குகிறது. சுற்று பயணிகளுக்காக புதிய கழிவறை கட்ட வேண்டியிருக்கிறது.

இந்த கட்டுமான நிதிச்சுமை குறித்து சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியிடமும், நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இடமும் தெரிவித்து விட்டோம் என்று தெரிவித்தார்.

இம்முறை 130 தாம் ஆண்டாக பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட விருக்கிறது. பத்துமலை முருகன் கோவில் 1873 ஆம் ஆண்டில் கட்டப் பட்டது. 1888 ஆம் ஆண்டு முதல் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.


Pengarang :