NATIONAL

முகநூல் பக்கத்தில் தடுப்பூசி கொள்முதல் விவகாரங்கள் குறித்து அவதூறான பதிவை வெளியிட்ட நபர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜன. 31 – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தடுப்பூசி கொள்முதல் விவகாரங்கள் குறித்து அவதூறான பதிவை வெளியிட்ட குற்றச்சாட்டில் ‘சங் கெலெம்பாய்’ என்ற பதிவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டப்பட்டார்.

டிசம்பர் 21 2020 அன்று அதிகாலை 2.03 மணிக்கு, “சஹாரின் முகமட் யாசின்” என்ற தனது முகநூல் பக்கம் மூலம் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் நோக்கத்துடன் தகவல்களை உருவாக்கி பதிவேற்றியதாக 72 வயதான டத்தோ அப்துட் சாரின் முகமட் யாசின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த இடுகை அதே ஆண்டு டிசம்பர் 22 அன்று பிற்பகல் 3 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தால் கண்டறியப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 (1)(a) இன் கீழ் அக்குற்றச்சாட்டு RM50,000 வரை அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். தண்டனைக்கு பிறகும் குற்றம் தொடரப் பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் RM1,000 அபராதம் விதிக்கப்படும்.

துணை அரசு வக்கீல் நூரில்யா எலினா நோர் அஸ்மல் ஒரு உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீன் கோரினார்.

தனது தரப்பினருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் அப்துல் ஜரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ அபு பக்கர் இசா ராமட் கூறினார்.

“அந்நபருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் இன்னும் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது மனைவி, ஓர் இல்லத்தரசி. அவர்கள் ஜாமீன் செலுத்துவதற்குச் சேமிப்பைப் பயன்படுத்த வேண்டும்,“ என்று வழக்கறிஞர் கூறினார்.

நீதிபதி என். பிரிசில்லா ஹேமமாலினி ஒரு உத்தரவாதத்துடன் ரிம7,000 ஜாமீனை அனுமதித்தார்.

– பெர்னாமா


Pengarang :