MEDIA STATEMENTPBT

சீனர்கள் ஆதரவையும்  திரட்டுவதில்  நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் மும்முரம்.

செய்தி ; சு.சுப்பையா

கோல குபு பாரு மே.2- கோல குபு பாருவில்  மிகவும் பழமை வாய்ந்த சீன ஆலயம் உள்ளது. சுமார் 129 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட யோ சான் கு மியாவ் என்ற இந்த சீன ஆலயம் கோல குபு பாரு சீனர்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது. இந்த ஆலய நிர்வாகம் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் புவான் பாங்கிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டது.

இந்த ஆலயத்தில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஜ.செ.க.வின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜ.செ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரெசா கொக் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட 500க்கும் மேற்பட்ட சீனர்கள் வேட்பாளர்  புவான் பாங்கிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

வேட்பாளர் புவான் பாங் மிகுந்த நெருக்கடியான கால அட்டவனையால் 6.00 மணிக்கு வர வேண்டியவர் இரவு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

கோல குபு பாரு சட்ட மன்றத்தில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள் உருவாக்க தான் கடுமையாக பாடு படப் போவதாக தெரிவித்தார்.

மேலும் இத்தொகுதியை நல்ல சுற்றுலா தளமாக உருவாக்கப் போவதாகவும் புதிய தங்கும் விடுதிகள் கோல குபு பாருவில் கொண்டு வரப் போவதாக தெரிவித்தார்.

காலை முதல் இரவு வரையில் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகிறார். காலையில் சந்தைகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார். இதே போல் கோல குபு பாரு வட்டாரத்தில் உள்ள இந்து ஆலயங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இரவு 10.00 மணி வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்


Pengarang :