NATIONAL

20,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்குச் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு

துாரன், பிப் 2 – நாடு முழுவதும் உள்ள  20,000க்கும் மேற்பட்ட கைதிகள் சமூக அடிப்படையிலான மறுவாழ்வுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை  சீராகவும்  முறையாகவும்  செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகக் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதிலும்  மீண்டும் குற்றம் புரியத் தலைப்படும் தன்மையை  0.5 விழுக்காட்டிற்குக் கட்டுப்படுத்தவும்  இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பது நிரூபணமாகியுள்ளது எற்று அவர் சொன்னார்.

பரோல் திட்டம், கைதிகளின் உரிமம் பெற்ற விடுதலைத் திட்டம், கைதிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் திட்டம், கைதிகளின் தொழில்துறை மறுசீரமைப்பு திட்டம் மற்றும் கட்டாய வருகை ஆணை ஆகியவற்றை உள்ளடக்கிய  சிறைக்கு அப்பாற்பட்டத் திட்டம் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த திட்டங்கள் மூலம் மனித ஆற்றலை மீண்டும் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில்  மலேசிய சிறைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்கள் நாட்டின் சிறை சேவையின் தரத்தை மேலும் மேம்படுத்தும் என்று  நம்புகிறேன் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற அடிப்படை சிறை மேலாண்மை பாடத் தொடர் 1/2023 இன் தேர்ச்சி அணிவகுப்பு நிறைவில்  ஆற்றிய உரையில்  அவர்  கூறினார்


Pengarang :