ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பீடோர் தடுப்புக் காவல் முகாமிலுள்ள அனைத்துப் பெண் கைதிகளும் இடமாற்றம்

தாப்பா, பிப். 3 – பீடோர் குடிநுழைவு தடுப்புக் காவல் முகாமை தற்காலிகமாக மூடுவதற்கு ஏதுவாக  அங்கிருந்த 100 பெண் கைதிகளும் நேற்றிரவு பல்வேறு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அந்தப் பெண் கைதிகள் அனைவரும்  கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில், நெகிரி செம்பிலானில் உள்ள லெங்கெங் மற்றும் பகாங்கில் உள்ள கெமாயான் ஆகிய தடுப்புக் காவல் முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்  டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

கைதிகளின் கலவரம் மற்றும் அங்கிருந்து தப்பியது தொடர்பான விசாரணை முடிவடையும் வரை அந்த முகாம்  தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

தப்பியோடியக் கைதிகளை கைதிகளைக் கண்டறியும் நடவடிக்கைக் குறித்து கருத்துரைத்த அவர், தேடுதல் நடவடிக்கையின் சுற்றளவு இப்போது சம்பவ இடத்திலிருந்த  ஐந்து கிலோமீட்டர் வரை விரிவாக்ப்பட்டுள்ளது என்றார்.

அவர்கள் முகாமிலிருந்து  வெகு தொலைவில் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இரண்டாவது நாளுக்குச் செல்லும்போது ​​பசி  நாளைய தினத்தை எளிதாக்கும் என்று ரஸ்லின் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 1) பீடோரில் உள்ள தற்காலிக குடிநுழைவு முகாமின் ஆண்கள் தொகுதியிலிருந்து 131 சட்டவிரோத குடியேறிகள் தப்பிச் சென்றனர். அவர்களில் ஒருவர் சாலை விபத்தில் உயிழந்ததாகக் கூறப்படுகிறது.

தப்பியோடியவர்களில் 115 பேர் ரோஹிங்கியா கைதிகளாவர். 15 மியன்மார் பிரஜைகள் மற்றும் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களில் அடங்குவர்.


Pengarang :