NATIONAL

பொதுச் சேவை ஊதிய அமைப்பின் (எஸ்எஸ்பிஏ) ஆய்வின் முடிவுகள் விரைவில் 

மலாக்கா, பிப் 9: பொதுச் சேவை ஊதிய அமைப்பின் (எஸ்எஸ்பிஏ) ஆய்வின் முடிவுகள் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டுக்குள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நன்மையளிக்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 12 ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதம் ஆய்வு செய்யப்பட்டு உயர்த்தப் படாததால், இந்த எஸ்எஸ்பிஏ ஆய்வு குறித்து புகார்கள் உள்ளன.

கடந்த ஆண்டு நான் உத்தரவாதம் அளித்தேன், இந்த ஆண்டு நான் செயல்முறையை விரைவுபடுத்தும் நிலையை அடைந்தேன், ”என்று அவர் கூறினார்.

இன்று மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் (எம் ஐடிசி) மலாக்கா மாநில அரசு ஊழியர்களுடன் பிரதமரின் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மலாக்கா முதன்மந்திரி டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோவும் உடன் இருந்தார்.

இந்த செயல்முறை துரிதப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

“அதன் பிறகு நாங்கள் அறிவிப்போம். எனவே, இந்நடவடிக்கை இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டில் இறுதியில் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

ஆய்வின் இறுதி அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.

மாநில தலைமைச் செயலாளர் (கேஎஸ்என்) டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி மற்றும் பொதுச் சேவை இயக்குநர் ஜெனரல் (கேபிபிஏ) டத்தோஸ்ரீ வான் அகமட் டஹ்லான் அப்துல் அஜிஸ் ஆகியோரின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக அன்வார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :