EXCO Infrastruktur & Kemudahan Awam dan Pemodenan Pertanian & Industri Asas Tani, Ir Izham Hashim menjawab soalan ketika Sidang Dewan Negeri Selangor di Bangunan Dewan Negeri Selangor, Shah Alam pada 6 Disember 2022. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புயலில் பாதிக்கப்பட்ட வணிகருக்கு பண்டான் இண்டா தொகுதி உறுப்பினர் இஷாம் உதவி

ஷா ஆலம், பிப் 17- அண்மையில் ஏற்பட்ட புயல் காற்றில் வணிகர் ஒருவரின் அங்காடிக் கடை சேதமடைந்த தகவல் பாண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹஷிமின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அந்த வணிகர் எதிர்நோக்கும் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் தமது தரப்பு ரொக்க உதவியை வழங்கியதாக இஷாம் தெரிவித்தார்.

இம்மாதம் 15ஆம் தேதி உலு லங்காட் மாவட்டத்திற்கு மேற்கொண்ட பணி நிமித்தப் பயணத்தின் போது பாண்டான் இண்டாவுக்குச் சென்று அந்த வணிகரைச் சந்தித்தேன். 

அவருக்கு ரொக்க உதவிகள் வழங்குவது தவிர்த்து புயலில் சேதமுற்ற கடையை மறுபடியும் நிர்மாணித்து தருவதில் உதவுவது குறித்து தொகுதி சேவை மையம் பரிசீலித்து வருகிறது என்று அவர் தனது பேஸ்பு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :