ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆணையை அரசியல்வாதிகள் கடைப்பிடிக்க வேண்டி  வலியுறுத்தினார்.

கோம்பாக் , மார்ச் 3; இங்கு நடந்த சீனப்பெருநாள்  உபசரிப்பில் கோம்பாக் எம்.பி.யாக பேசிய மந்திரி புசார்   அமிருடின், மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆணையை அரசியல்வாதிகள் மதித்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும்  வலியுறுத்தினார்.

மலேசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த ஒரு கட்சியின் கோரிக்கைக்கும்  தாம் செவி சாய்க்க முடியாது.

கோம்பாக் எம்.பி.யாக பேசிய மந்திரி புசார், சமீப ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் ஸ்திரமின்மையின் விளைவுகளை நேரில் பார்த்த பிறகு, மாட்சிமை தங்கிய பேரரசர் ஆணையை மனதில் கொண்டு நாட்டின்  இறையாண்மையை காப்பதில்  அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

“சுல்தான் இப்ராஹிம் ஆணை அவரது மாட்சிமையின் நம்பிக்கை மற்றும் ஆலோசனையாகும்,   இது அனைத்து குடிமக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பின்பற்றப்பட வேண்டும்.

“கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவும்  உறுதியற்ற தன்மை எவ்வாறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துள்ளது என்பதை நமது மாமன்னர் கண்டு நாடு எப்படி முன்னெடுக்கப்பட வேண்டும்  என்பதை  தீர்மானித்து  மக்களுக்கு ஒரு நல்ல வழியை  போதிக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

கடந்தக்கால  தவறுகளை  நாங்கள் சரி செய்ய முயற்சிக்கிறோம். பொருளாதார மீட்சி பணியை ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது, மன்னருக்கு தனக்கே உரிய தொலைநோக்கு பார்வை உள்ளது.

“எங்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் மட்டத்தில், நாட்டில் இருக்கும் ஒற்றுமையைப் பேணவும், எங்கள் பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றவும் பாடுபடுவோம்,” என்று டத்தோ அமிருடின்  கூறினார்.

கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற்ற டேவான் ராக்யாட்டின்  15 வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தின் தொடக்க விழாவில் சுல்தான் இப்ராஹிம் அரச உரையில், அனைத்துக் கட்சிகளும் யதார்த்தத்தை ஏற்று உருவாக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.

நாட்டின்  நலனை கருத்தில் கொண்டு எந்த ஒரு தனிநபர் அல்லது கட்சி அரசியல் விளையாட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் நல்வாழ்வுக்கும் , நாட்டின் மேம்பாட்டுக்கு  இப்பொழுது தங்களை அர்பணிக்க வேண்டிய தருணம் இது என்றும் மாமன்னர் உரையில் அறிவுறுத்தினார்.


Pengarang :