ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சரவாக்கில் வெள்ளம் !,  1,497 பேர், 12 தற்காலிக  தங்குமிடங்களில் !

கூச்சிங், மார்ச் 3: சரவாக்  வெள்ளத்தால்  இன்று காலை 8 மணி நிலவரப்படி 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,193 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  அந்த எண்ணிக்கை 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,497 பேராக   பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜேபிபிஎன்) அறிக்கையின் அடிப்படையில், தற்காலிக தங்கும் மையங்களின் எண்ணிக்கையும் (பிபிஎஸ்) 12 ஆக அதிகரித்துள்ளது, இது நேற்று எட்டாக இருந்தது.

“அறிக்கையின்படி.  அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப் பட்டவர்களுக்கு இடமளிக்கும் மூன்று பிபிஎஸ்கள் கூச்சிங்கில் உள்ளன,  அதாவது  297 பேர் பாதிக்கப்பட்டுள்ள  டேவன் ஆர்-பியாங் கம்போங் சினார் புடி பாரு, அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.கே (சி) சுங் ஹுவா சுங்கை தெங்கா (286) மற்றும்  டேவான்  மஸ்யரகாட் ஸ்டாபோக் (238),” உள்ளனர். தற்போது, அனைத்து PPS வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சரவாக்கின் தெற்கில் உள்ள கூச்சிங், லுண்டு, பாவ், சிரியன் மற்றும் சிபுரான் போன்ற பல பகுதிகளை சேர்ந்தவர்கள்.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தின் படி, மாநிலத்தின் வானிலை மதியம் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மாலையில் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
– பெர்னாமா


Pengarang :