ஷா ஆலம், மார்ச் 5: இன்று காலை பண்டார் பாரு சுங்கை பூலோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது.

அதிகாலை 3.58 மணிக்குச் செயல்பாட்டு மையத்திற்கு அழைப்பு வந்ததாகவும், சுங்கை பூலோ, டாமன்சாரா, கோத்தா அங்கெரிக்

தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் சம்ப இடத்திற்கு அனுப்பியதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

“ஐந்து கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணிக்குத் தீ வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காலை 6.50 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை.