NATIONAL

தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஆதரவாக சிலாங்கூர் மடாணி தொழில் முனைவோர் நிதி (டம்ஸ்) திட்டம் அறிமுகம்

ஷா ஆலம், மார்ச் 5: சிலாங்கூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர
தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஆதரவாக சிலாங்கூர் மடாணி
தொழில் முனைவோர் நிதி (டம்ஸ்) திட்டத்தை மாநில அரசு நேற்று தொடங்கியது.

சிலாங்கூர் சிறுதொழில் முனைவோர் நிதியத்தின் மறுபெயரிடப்பட்ட முயற்சியை
வெற்றியடையச் செய்ய 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், 145
தொழில் முனைவோர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ மந்திரி
புசார் கூறினார்.

மல்டிமீடியா படைப்புத் தொழில்கள், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கிய
ஆக்கப்பூர்வமான பொருளாதாரம் இத்திட்டத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார், முன்பு உணவு மற்றும் பானங்கள் துறையில்
மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் உணவு, பானம் அல்லது தையல் துறையில் ஈடுபட்டுள்ள சிறு
தொழில்முனைவோர் மீது அதிக கவனம் செலுத்தியிருந்ததால், இப்போது அது
படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக புகைப்படத்
துறை போன்றவையாகும் என்றார்.

வணிக பயன்பாட்டிற்கான உபகரணம் அல்லது பொருள் வழங்கும் உதவியின் வடிவம்
RM30,000 வரையிலான மதிப்பு வரம்புடன் தயாரிப்புகள் அல்லது சேவைகளின்
உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும்  என்று அவர் மாநில அரசு நிர்வாக கட்டிடத்தில்
டம்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் கூறினார்.


Pengarang :